search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனைத்து கட்சிகள்"

    • மதுபான கடையை தடை செய்ய வலியுறுத்தி அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு இடையூறாக மதுபான கடை அமைப்பதை தடுத்து நிறுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கீழ்குளம் அருகே வில்லாரிவிளையில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் பொதுமக்களுக்கும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் தொடங்க முற்படும் மதுபான கடையை தடை செய்ய வலியுறுத்தி அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு வக்கீல் பால்மணி தலைமை தாங்கினார். பாரதிய ஜனதா சார்பில் அனில்குமார், அ.தி.மு.க. சார்பில் வின்சன்ட், கம்யூனிஸ்ட் சார்பில் வக்கீல் ஸ்டான்லி, நாம் தமிழர் ஜெனிஸ், தி.மு.க. சார்பில் அனைத்து பேரூராட்சி கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர். கூட்டத்தில், வில்லாரி விளை பகுதியில் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள், வழிபாட்டு தலங்கள், பெண்கள் குழந்தைகள் அதிகம் வந்து செல்லும் பேருந்து நிறுத்தம் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இடையூறாக மதுபான கடை அமைப்பதற்காக வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இடையூறாக மதுபான கடை அமைப்பதை தடுத்து நிறுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    ×